How Much Does a Night at the Burj Khalifa Cost?: துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா எனும் கட்டிடம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த ஒரு இடமாகும். அந்த நிலையில், புர்ஜ் கலிஃபாவில் ஏதேனும் ஹோட்டல் உள்ளதா? மக்கள் அங்கு சென்று தங்கலாமா? என்ற கேள்வி எழுகிறது.
புர்ஜ் கலிஃபா
இந்த உலகத்தில் மிகப்பெரிய கட்டிடங்களில் புர்ஜ் கலிஃபாவிவும் ஒன்று. துபாயில் அமைந்துள்ள இந்த வானுயர கட்டிடம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு முக்கிய இடமாகும். அப்படியாக, புர்ஜ் கலிஃபாவில் ஒரு ஹோட்டல் உள்ளது.
இருப்பினும் அதனுடைய வாடகை தெரிந்து கொண்டால் அதிர்ச்சியடைந்து விடுவோம். அங்கு ஒரே ஒரு ஹோட்டல் மட்டுமே இருக்கிறது. அந்த ஹோட்டலின் பெயர் “அர்மானி ஹோட்டல் துபாய்.

அர்மானி ஹோட்டல் துபாய்
இந்த ஒரு” சொகுசு 5 நட்சத்திர ஹோட்டல்” அர்மானி ஹோட்டல் துபாய் ஃபேஷன் ஜாம்பவான், ஜார்ஜியோ அர்மானியால் வடிவமைக்கப்பட்டது. உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் தரைத்தளத்தில் இருந்து 39வது தளம் வரை அர்மானி ஹோட்டல் அமைந்துள்ளது.
இது ஜார்ஜியோ அர்மானியின் எளிமையான அழகுக்கும் நுட்பமான சொகுசு சிந்தனைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதோடு, ஹோட்டலில் ஒவ்வொரு அம்சமும் அர்மானி அவர்களாலே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் சுமார் 160 விருந்தினர் அறைகள் உள்ளது.
அங்கு உலக தரம் வாய்ந்த உணவகம் மற்றும் ஓய்வளிக்கும் அர்மானி-ஸ்பா வரை அனைத்தும் ஜார்ஜியோ ஆர்மானி அவர்களாலே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆடம்பரமான மற்றும் சொகுசு தங்குமிடத்தை வழங்குகிறது. இந்த ஹோட்டல் டவுன்டவுன் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் ஒரு முக்கிய இடத்தில் அமைந்து இருக்கிறது.
இது துபாய் மால் மற்றும் துபாய் நீரூற்றிலிருந்து சில அடிகள் தொலைவில் மட்டுமே உள்ளது. இங்கு ஒரு இரவு ஒரு நபர் தங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்கின்ற ஒரு கேள்வி உங்களுக்கு இப்பொழுது வரலாம். அந்த வகையில், இந்த ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு சராசரி விலை 60 ஆயிரம் முதல் மூன்று லட்சம் வரை ஆகின்றது.
இருந்தாலும் சிக்னேச்சர் சூட்ஸ் போன்ற மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆடம்பரமான அறைகளுக்கு முன்பதிவு மற்றும் வரிகளை பொறுத்து ரூபாய் 3 லட்சத்து ஐம்பதாயிரம் முதல் 8 லட்சம் அல்லது அதற்கு அதிகமாகவும் செலவாகலாம் என்று சொல்லப்படுகிறது.
இங்கு நீச்சல் குளங்கள் ஸ்பாக்கள் உணவகங்கள் பார்கள் ஓய்வறைகள் போன்ற பல உலக தரம் வாய்ந்த வசதிகள் இருக்கிறது. இவற்றில் பலவற்றுக்கும் பல்வேறு கட்டணங்கள் உண்டு. விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும் இங்கு தங்க கூடிய அனுபவம் வித்தியாசமானதும் அற்புதமானதாகவே அமைகிறது.




