உக்ரைனுக்கு ட்ரோன்களை வழங்குவதற்காக பிரித்தானியா விலை கொடுக்க வேண்டி ஏற்படும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள இலக்குகள் மீதான தாக்குதல்களில் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா, உக்ரைன் நெருக்கடியை வேண்டுமென்றே தீவிரப்படுத்த பிரித்தானியா முயல்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், லண்டனின் நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும், அதற்கு அது பதிலளிக்க வேண்டியிருக்கும். இம்மோதலில் அதன் ஈடுபாடு எந்த அளவிற்கு ஆழமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அது அதிக விலையைக் கொடுக்கும்.
ஐக்கிய இராச்சியம் இரத்தக்களரி குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உடந்தையாகவும், இணை-குற்றவாளியாகவும் செயல்படுகிறது என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர், ‘பிரிட்டன் உக்ரைனுடன் தோளோடு தோள் நிற்பதாகக் கூறினார். உக்ரைனிலும், பிரித்தானியா மற்றும் நமது நட்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுக்கும் ஆக்கிரமிப்புக்கு எதிராக நிற்பதில் எமது அரசாங்கத்தின் உறுதி குறித்து ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது’ என்றுள்ளார். பி.பி.சி




