நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது; ஐ.நாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தை

1 Min Read

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானம் சம்பந்தமாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேவேளை, ஐ.நா.சபை விடுத்துள்ள அறிக்கையில் ‘உயர்நீதிமன்றம்’ என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஏனைய நீதிமன்றங்கள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில், உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஐ. நா. சபை விடுத்த அறிக்கையில் ‘ உயர்நீதிமன்றம்’ என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய நீதிமன்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே அங்கும் தவறான தகவல்களே வழங்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *