- 60 ஆயிரம் வீடுகளுக்கு மின்துண்டிப்பு
- 190 விமான வேவைகள் ஒத்திவைப்பு
ஹவாய் தீவின் பெரிய தீவை லாலா சூறாவளி நேற்று முன்தினம் தாக்கியதைத் தொடர்ந்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், 190 விமான சேவைகள் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் மாநில ஆளுனர் ஜோஸ் கிரீன் தெரிவித்துள்ளார்.
இத்தீவிலுள்ள மூன்று மருத்துவமனைகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களிடம் மாற்று மின்பிறப்பாக்கிகள் உள்ளன, அதனால் அவர்கள் மின்துண்டிப்பை சமாளித்து கொள்வார்கள் எனவும் கூறினார்.
மணிக்கு 80 மைல் வேகத்தில் காற்று வீசிய பிறகு லாலா சூறாவளியாக வலுப்பெற்றதோடு பின்னர் காற்றின் வேகம் மணிக்கு 91 மைல் என உச்சத்தை எட்டியது.
பெரிய தீவுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதே நேரத்தில் ஹவாயின் ஏனைய ஏழு முக்கிய தீவுகளான மௌய், மொலோக்காய், கஹூலாவே, ஓஹு, லனாய், கௌவாய் மற்றும் நிஹாவ் ஆகியனவும் வெப்பமண்டல புயல் எச்சரிக்கையின் கீழ் உள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏ.பி.சி நியூஸ், பி.பி.சி




