கொவிட்-19 பெருந்தொற்றுக்கு ஜுலை மாத்தத்தில் 5,22,000 பேர் புதிதாக உள்ளானதாக என்று சீனாவின் தேசிய நோய் கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இத்தொற்றுக்கு உள்ளானவர்களில் 487 பேர் கடுமையான பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்ததோடு ஒருவர் உயிரிழந்ததாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஓமிக்ரான் வகை திரிபுக்கு இவர்கள் உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன,
அதேவேளை, என்.பி.1.8.1 திரிபும் அதன் உப பிரிவுகளும் பெரும்பாலான பாதிப்புகளுக்குக் காரணமாக விளங்குவதும் தெரிய வந்துள்ளது,
நோயெதிர்ப்பு சக்தியின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வைரஸ் பிறழ்வுகளும் கோடைகாலப் பயணங்களின் அதிகரிப்பும் சமீபத்திய நோய்த்தொற்றுகளின் மிதமான உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளன என்று பெய்ஜிங் யூ ஆன் மருத்துவமனை மற்றும் தலைநகர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சுவாச தொகுதி நோயியல் நிபுணர் லி டோங்செங் கூறியுள்ளார். தொடர்ச்சியான SARS-CoV-2 பிறழ்வுகள், ஏற்கனவே உள்ள நோயெதிர்ப்பு சக்தி வழங்கும் பாதுகாப்பைக் குறைத்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
குளோபல் டைம்ஸ்




