யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வீடொன்று குறித்த இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எம்.ஆர். ராஜா எனும் இராணுவ வீரருக்கு இராணுவத்தினரின் “சேவா வனிதா” திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியில் புதிதாக வீடொன்றினை அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல்லினை, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி நாட்டி வைத்தார். அதனை தொடர்ந்து வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று , அவை நிறைவடைந்த நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த வீட்டினை யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்கவினால், இராணுவ வீரரின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண இராணுவ வீரருக்கு புதிய வீடு கையளிப்பு

By

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
