தித்வா புயலால் பாதிக்கப்பட்ட புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு ஐந்தாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு அண்மையில், புத்தளம் பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சருமான பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம். பைசல் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
புயலினால் முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகள்,பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தகர்களுக்குமென இழப்பீடுகள் வழங்கப்பட்டன .இந்நிகழ்வில் பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் செயலாளர், இணைப்புச் செயளாலர், புத்தளம் பிரதேச செயலாளர் எஸ்.பி.விதானகே, புத்தளம் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் எம்.என்.எம்.நுஸ்கி மற்றும் புத்தளம் பிரதேச சபையின் தலைவர், புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், புயலினால் வாழ்வாதார பாதிப்புக்குள்ளானவர்களும் கலந்து கொண்டனர்.




