நாளாந்தம் துரிதமடையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்;

1 Min Read

நாட்டில் இந்த ஆண்டில் நேற்று வரையான காலப்பகுதியில் 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை டெங்கு நோய் காரணமாக நேற்று வரை 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், 175 அதி அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலத்தில்,டெங்கை ஒழிப்பதற்கான உச்சக்கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.இந்நிலையில்,இந்தியாவிலிருந்து கிருமிநாசினிகளை கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 17,779 பேருக்கு இங்கு டெங்கு ஏற்பட்டுள்ளது.இந்நோய் தொற்றில் இரண்டாவது இடத்தில் கொழும்பு மாவட்டம் உள்ளது. இங்கு 16,665 பேர்,டெங்குத் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதேவேளை, அதிகளவான நோயாளர்கள் பதிவான மாகாணமாக மேல் மாகாணம் இருந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை மேல் மாகாணத்தில் 44,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இரண்டாவதாக தென் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இம்மாகாணத்தில் 12,586 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வரும் இந்த வேளையில், 175 அதி-அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு தெரிவிப்பு

அவர்களில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17,779 என்றும்

இரண்டாவது அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 16,665 என்றும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, அதிகளவான நோயாளர்கள் பதிவான மாகாணமாக மேல் மாகாணம் தொடர்வதுடன், இந்த ஆண்டில் இதுவரை மேல் மாகாணத்தில் 44,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இரண்டாவதாக தென் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த மாகாணத்தில் 12,586 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *