சொலமன் தீவுகளின் பெரிய தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுப் பகுதியிலிருந்து ஒரு ஆணின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் ஹோனியரா அருகே உள்ள கோல்ட் ரிட்ஜ் சுரங்கத்தின் குழிகளில் ஒன்றில், நேற்று முன்தினம் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஆஷ்லி ஓலோ என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளளனர்.
பதில் பொலிஸ் ஆணையர் ஜேம்ஸ் ஐடோரியா விடுத்துள்ள அறிக்கையில், இன்னும் எத்தனை பேர் மண்ணில் புதையுண்டுள்ளனர் என்று தெரியவில்லை. ஆனால் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுரங்க நிலச்சரிவில் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் எனக் கூறப்படும் 10 பேர் வரை புதையுண்டிருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் ஆரம்பத்தில் செய்தி வெளியிட்டன.
ஏ.பி.சி நியூஸ்




