ரூ. 200 மில். போதைப்பொருளுடன் 27 வயது கனேடியர் கைது

1 Min Read

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (26) அதிகாலை பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சி ஒன்றை இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் முறியடித்துள்ளனர்.

கனடாவின் டொராண்டோ நகரில் இருந்து தோஹா வழியாக கட்டார எயார்வேஸ் (QR662) விமானம் மூலம் அதிகாலை 2.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்த 27 வயதுடைய கனேடியப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓவியரான சந்தேகநபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளையும் அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்திய போது, அவற்றினுள் பழுப்பு நிறத்திலான 80 ஹாஷிஸ் போதைப்பொருள் பலகைகள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 20.117 கிலோகிராம் எடையுடைய இந்தப் போதைப்பொருள் தொகையின் தெரு மதிப்பு சுமார் ரூ. 201.89 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் (PNB) சுங்க அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பாரிய பெறுமதியுடைய போதைப்பொருளுடன் சிக்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *