இவ்வருடம் இடம் பெற்ற மாகாணமட்ட பெண்களுக்கான காற்பந்து போட்டியில் மீண்டும் சாதனை படைத்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை சேர்ந்த மட்/மமே/ பன்சேனைபாரி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவிகள். 20 வயதுப்பிரிவில் 1ம் இடமும்,
மேலும் 17 வயதுப்பிரிவில் 3ம் இடமும் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வெற்றிக்கு மட்/ மேற்கு உடற்கல்வி ஆ.ஆலோசகர் அரியதாஸ் ஆசிரியர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் (ரவீந்தினி), மற்றும் வலய சக பயிற்றுவிப்பாளர்கள், பெற்றார்களுக்கும் பங்களிப்பு செலுத்தித்துள்ளனர். கடந்த 2022 ஆண்டு 17வயதுபிரிவில் 2 இடமும்,
2023 ஆண்டு 17வயது பிரிவில்1ம் இடமும்,
2024 ஆண்டு 17வயது பிரிவில் 1ம் இடமும்,
2025 ஆண்டு 17வயது பிரிவில் 1ம் இடமும் 20வயது பிரிவில் 3ம் இடமும் பெற்று தமக்கான ஓர் இடத்தை மாகாணத்தில் தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்/மமே/ பன்சேனைபாரி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவிகள் காற்பந்து போட்டியில் மீண்டும் சாதனை!

Leave a Comment


