பேருவளை கால்பந்தாட்ட சங்க தலைவர் வெற்றிக் கிண்ணத்திற்கான நொக் அவுட் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை (25) பி.ப. 3.30 மணிக்கு தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் தர்கா நகர் ரெட் ஸ்டார் மற்றும் பேருவளை கிரேட் ஸ்டார் கால்பந்து கழக அணிகள் மோதவுள்ளன.
அன்றைய தினம் நடைபெறும் பரிசளிப்பு விழாவுக்கு பேருவளை கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். றிஸ்வான் தலைமை வகிக்கவிருப்பதோடு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ஜீவ ரணசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை கால்பந்தட்ட சம்மேளன உப தலைவர்களான ரஞ்சித் ரொட்ரிகோ, கலாநிதி மனிலால் பெர்னாண்டோ ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பேருவளை பிரதேச சபைத் தலைவர் பைஸான் நைஸர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம், இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் ரூமி ஹாஷிம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.




