A/L பரீட்சை ஒத்திவைப்பு கோரிக்கை தள்ளுபடி!

1 Min Read

2026 க.பொ.த. உயர் தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனுவை (Writ Petition) மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட நீண்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதிமன்றம், அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

தமது முதலாவது மற்றும் இரண்டாவது தடவைகளுக்காக 2026 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஒரு சில மாணவர்களினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதிய கால அவகாசம் கோரி அவர்கள் இந்த சட்ட நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும், நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவின்படி திட்டமிட்டவாறு அடுத்த மாதமே பரீட்சை நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *