முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான 21 வயதுடைய அநுத தினஜித் பண்டாரவை 24 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (22) அனுமதி வழங்கியுள்ளார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து சுமார் ரூ. 20 மில்லிய பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான அனுத பண்டார நேற்றையதினம் (21) கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 13ஆம் திகதி குறித்த சீனப் பிரஜை வாகனத்தில் பணத்தைக் கொண்டு சென்றுகொண்டிருந்த போதே இந்தத் திட்டமிட்ட கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, நாட்டின் பிரபல தொழிலதிபர் ஒருவரின் பேரனுக்கும் இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.




