கட்டார் அன்பளித்த விமானம் ஒரு மாதம் சேவையில் இருந்து நீக்கப்படும் – ஜனாதிபதி ட்ரம்ப்

1 Min Read

கட்டார் அன்பளிப்பாக வழங்கிய ஜெட் விமானத்தை முழுமையான மேம்படுத்துதலுக்கு உட்படுத்துவதற்காக ஒரு மாத காலத்திற்கு சேவையில் இருந்து நீக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் பாதுகாப்புத் திறன்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஜெட் விமானம் மேம்படுத்துவதற்காக ஒரு மாதகாலம் சேவையில் இருந்து நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நியூ ஜெர்சியில் நடந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகள் இல்லாத நிலையில், 400 மில்லியன் டொலர் பெறுமதியான அந்த விமானத்தில் ஏன் பயணம் செய்கிறீர்கள்? என்று ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் வினவியதற்கு மேற்கண்டவாறு பதிலளித்த அவர், அந்த விமானத்தில் அதிகத் திறன் உள்ளது. அதன் திறன்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்காக அந்த விமானம் சேவையில் இருந்து ஒரு மாத காலம் நீக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

         டெலிகிராப்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *