திலித்தின் கட்சியில் இணைந்த ஐ.தே.க. செங்கடகல அமைப்பாளர்

1 Min Read

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளர் கலாநிதி சமிந்த மலலசேகர, இன்று (21) ‘சர்வஜன பலய’ (சர்வஜன அதிகாரம்) அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.

சர்வஜன பலய கட்சியின் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்போது அவர் செங்கடகல தொகுதிக்கான சர்வஜன பலய அமைப்பாளராகவும், சர்வஜன தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவராகவும் கலாநிதி சமிந்த மலலசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தைச் சர்வஜன பலய கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சர்வஜன பலய கட்சியின் தலைமையகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

இந்த விசேட நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கண்டி மாவட்டத் தலைவருமான திலும் அமுனுகம மற்றும் கட்சியின் உப தலைவரும் இரத்தினபுரி மாவட்டத் தலைவருமான காமினி வலேபொட உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *