முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாராவின் மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 20 மில்லியன் பணத்தை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 2 கோடி பணத்தை இவ்வாறு கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரை கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




