இந்தியாவின் முதலாவது தனியார் ரொக்கட் நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அதன் ஊடாக விண்வெளி சுற்றுப்பாதையில் செயற்கைகோளை செலுத்தும் திறன் பெற்றுள்ள அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் விக்ரம் – 1 என்ற பெயரில் தயாரித்த இந்த ரொக்கட், இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.05 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. என்றாலும் இந்த செயற்கைக்கோள் முற்பகல் 11.30 மணிக்கு ஏவப்படவிருந்தமை தெரிந்ததே.
இந்த செயற்கைக்கோள், 450 கிலோ மீற்றர் புவி தாழ் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இச்செய்மதியை விண்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியன் மூலம் இந்தியாவின் முதலாவது தனியார் நிறுவனம் என்ற இடத்தைப் பிடித்துள்ளது என்றுள்ள விஞ்ஞானிகள், இந்தியாவின் வர்த்தக விண்வெளித் துறைக்கும், உலகளாவிய விண்வெளிச் சந்தையில் அதன் இருப்பை விரிவுபடுத்தும் இலட்சியங்களுக்கும் இது ஒரு மைல்கல் நிகழ்வாக அமைந்துள்ளது என்றுள்ளனர்.
த இன்டிபென்டன்ட்




