பாடசாலை மாணவர்களுக்கென சீன அரசாங்கம் சீருடைத்துணிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் பரிமாற்றம் பத்தரமுல்லை, இசுருபாயவிலுள்ள கல்வியமைச்சு வளாகத்தில் இடம் பெற்றுள்ளது.இச்சீருடைகள் அரசாங்க அரசாங்க பாடசாலைக மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. அரசாங்க பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு இவை வழங்கப்படவுள்ளது. இந்த விசேட உதவித் திட்டத்தின் கீழ், 2027ஆம் ஆண்டிற்காக இலங்கையிலுள்ள சுமார் 4.18 மில்லியன் பாடசாலை மாணவர்களின் முழுமையான சீருடைத் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதற்காக 10.820 மில்லியன் மீற்றர் அளவிலான சீருடைத் துணியை சீன அரசாங்கம் இலங்கைக்கு முற்றிலும் இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இதன்போது தொடர்புடைய இணக்கப்பாட்டு ஆவணங்கள் பரிமாற்றம் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷென் ஹொங் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது. இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் உட்பட கல்விய மைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.




