அணுமின் நிலைய இரகசிய ஆவணங்கள் இணையதளத்தில்!

1 Min Read

கூடங்குளம் அணுமின் நிலை​யம் தொடர்​பான முக்​கிய ஆவணங்​கள், இணைய உலகத்​தின் இருண்ட பகுதி என்று அழைக்​கப்​படும் ‘டார்க் வெப்​’பில் கசிந்​திருப்​ப​தாக தகவல் வெளியாகி உள்​ளது.

அணுமின் நிலை​யத்​தின் சில பகு​தி​களின் வரைபடங்​கள் மற்​றும் விநி​யோகஸ்​தர்​களின் விபரங்​கள் அடங்​கிய இந்த ஆவணங்​கள், பிரபல தொழில​திபர் அனில் அம்​பானி​யின் ரிலை​யன்ஸ் குழுமத்திலிருந்து திருடப்​பட்​டவை என ‘வேர்ல்ட் லீக்​ஸ்’ என்ற ரான்​சம்​வேர் ஹேக்​கர் குழு தங்​களது இணை​யதளத்​தில் பதிவிட்டுள்ளது.

இந்​தி​யா​வின் அணுசக்​தித் திறனை மேம்​படுத்​தும் பிரதமர் நரேந்திர மோடி​யின் இலட்​சி​யத் திட்​டங்​களில் கூடங்​குளம் அணுமின் நிலை​யம் மிக முக்​கிய பங்கு வகிக்​கிறது.

இதன் யூனிட் 3 மற்​றும் யூனிட் 4 ஆகிய புதிய பிரிவு​களுக்​கான உட்​கட்​டமைப்​பு​களை வடிவ​மைத்து உரு​வாக்​கு​வதற்​கான ஒப்பந்தத்​தை, கடந்த 2018ஆம் ஆண்டு ரிலை​யன்ஸ் இன்ஃப்​ராஸ்ட்​ரக்​சர் நிறு​வனம் பெற்​றது.

2027ஆம் ஆண்​டுக்​குள் பயன்​பாட்​டிற்கு வரவுள்ள இந்த இரு பிரிவு​களும் இணைந்து 2,000 மெகா​வாட் மின்சா​ரத்தை உற்​பத்தி செய்ய உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், ரிலை​யன்ஸ் நிறு​வனத்​தின் தரவுச் சேமிப்பகத்திலிருந்து இந்த ஆவணங்​கள் திருடப்​பட்​டுள்​ளமை பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்த விவ​காரம் குறித்து ரிலை​யன்ஸ் குழுமம் ரொய்ட்​டர்ஸ் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்​துள்ள விளக்​கத்​தில், “இந்​தி​யா​வின் மூன்றாம் தரப்பு தரவு மைய சேவை வழங்​குந​ரான ‘யோட்​டா’ நிறுவனத்​தின் சேர்​வரில் சேமித்து வைக்​கப்​பட்​டிருந்த எங்​களது தரவு​களில் ஒரு பகுதி கசிந்​துள்​ளதை ஒப்​புக்​கொள்​கிறோம்.

இது குறித்து மத்​திய அரசுக்கு முறைப்​படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறி​யுள்​ளது.

எனினும், எந்​தெந்த ஆவணங்​கள் கசிந்​துள்ளன என்ற விபரத்தை ரிலை​யன்ஸ் வெளி​யிட​வில்​லை. இந்​தத் தரவு கசிவு தொடர்​பாக இந்​திய கணினி அவசரக்​காலப் பொறுப்​புக் குழு (CERT-In) தீவிர விசா​ரணை​யில் ஈடு​பட்​டுள்​ள​தாகத் தகவல்​கள்​ தெரி​விக்​கின்​றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *