ஆப்கானியர்களை திருப்பி அனுப்புவதற்கு கவலை வெளியிட்ட யு.என்.எச்.சி.ஆர்

1 Min Read

பாகிஸ்தானிலிருந்து ஆப்கானியர்கள் கட்டாயமாக திருப்பி அனுப்பப்படுவது குறித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயம் கவலை தெரிவித்துள்ளது.

‘அகதிகளின் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ அச்சுறுத்தல் உள்ள ஒரு நாட்டிற்கு அவர்களை திரும்ப அனுப்பப்படக்கூடாது’ என்று யு.என்.எச்.சி.ஆரின் பாகிஸ்தான் பேச்சாளர் கைசர் கான் அஃப்ரிடி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிய அகதிகளையும் புகலிடம் கோருவோரையும் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பும் பாகிஸ்தானின் முடிவு குறித்து கவலை தெரிவித்த அவர், 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானின் பெருந்தன்மையையும் அவர் பாராட்டினார்.

மனித உரிமைகளுக்கு ஆபத்து உள்ள ஒரு நாட்டுக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தப்படும் பெண்கள், சிறுமிகள் குறித்தும், ஆபத்தில் இருக்கக்கூடிய பிற குழுக்கள் குறித்தும் யு.என்.எச்.சி.ஆர் குறிப்பாகக் கவலை கொண்டுள்ளது என்று கூறிய அவர், ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்புவது சுயமாகவும், பாதுகாப்பான முறையிலும், கண்ணியமாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டவுன் நியூஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *