ட்ரம்பின் நெருங்கிய நண்பர் மறைவு

1 Min Read

அமெரிக்க செனட்டரும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பருமான லிண்ட்சே கிரஹாம் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று தனது 71 ஆவது வயதில் காலமானார்.

திடீர் உடல்நலக்குறைவைத் தொடர்ந்து கிரஹாம் நேற்று முன்தினம் காலமானதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2002 இல் செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தென் கரோலினாவைச் சேர்ந்த இந்த அரசியல்வாதி, வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் வொஷிங்டனின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒருவராகத் திகழ்ந்தார். உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை கடந்த வெள்ளியன்று கீயூவ் நகரில் சந்தித்த அவர், வொஷிங்டன் திரும்பிய பின்னர் உயிரிழந்துள்ளார். அவரது பயணத்திற்கு முன்னர் உடல்நலக் கவலைகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செனட்டர் கிரஹாமின் மறைவையொட்டி ஜனாதிபதி ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், கிரஹாம் ஒரு உண்மையான அமெரிக்க தேசபக்தர் என்று பதிவிட்டுள்ளார்.

பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *