கனடாவில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, ஐவர் காயம்

1 Min Read

கனடாவின் டொராண்டோவில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு ஐவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெவித்துள்ளனர்.

வருடா வருடம் நடைபெறும் லத்தீன் திருவிழாவான ‘சல்சா ஒன் செயின்ட் கிளேர்’ விழாவின் போது, ​​டொராண்டோ நகர மத்தியில் இத்துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விசாரணை மற்றும் மீட்புப் பணிகள் தொடர்வதால், அப்பகுதியைத் தவிர்க்குமாறும், பொலிஸார் வழங்கும் அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறும் அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தையிட்டு கனடா பிரதமர் மார்க் கார்னி எக்ஸ் தளத்தில் இட்ட பதிவில், இத்துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் தாம் பேரதிர்ச்சி அடைந்ததாகவும், இதற்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்வதற்கான பொலிஸாரின் முயற்சிகளுக்குத் தனது முழு ஆதரவும் உண்டு. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயருறும் குடும்பங்களுக்கும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கும், இக்கொடூரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது பிரார்த்தனைகள்’ என்றும் கூறியுள்ளார்.

ரொய்ட்டர்ஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *