பிரித்தானிய கடற்பரப்பில் கடும் வெப்ப அலை

1 Min Read

பிரித்தானிய கடல் பிராந்தியத்தில் கடுமையான கடல் வெப்ப அலை நிலவி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

உலகளவில் நிலவும் அதிக கடல் வெப்பநிலை சில உயிரினங்களுக்கு பேரழிவு இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் இதுவரை இல்லாத மிக மோசமான வெப்ப அலை நிலவுகிறது. காலநிலை நெருக்கடி இல்லாமல் இது சாத்தியமற்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

வளிமண்டல நிலைமைகளே கடல் வெப்ப அலைக்குக் காரணம் என்று வானிலை அவதான நிலைய நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு பிரித்தானியா மிகவும் தீவிரமான கடல் வெப்ப அலைக்கு தற்போது முகம் கொடுத்துள்ளது. சராசரி வெப்பநிலை வழமையை விட 2 பாகை செல்சியஸ் அதிகமாக இருப்பதாகவும், சில இடங்களில் நீரின் வெப்பநிலை வழமையை விட 4-5 பாகை செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

த கார்டியன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *