கிறீன்லாந்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க தயார் – டென்மார்க் பிரதமர்

1 Min Read

கிறீன்லாந்து நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் நேற்று தெரிவித்துள்ளார்.

கிறீன்லாந்து தீவைக் கைப்பற்றும் திட்டங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் மீண்டும் முன்னெடுத்ததைத் தொடர்ந்து டென்மார்க் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்குபற்றியுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், கிறீன்லாந்து அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது என்றுள்ளதோடு அது டென்மார்க்குக்கு முக்கியத்துவம் அற்றது என்றும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்தே டென்மார்க் பிரதமரின் இந்த கருத்து வௌியாகியுள்ளது.

நேட்டோவில் அங்கம் வகிக்கும் டென்மார்க் நாட்டின் பிரதமர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்க ஜனாதிபதியின் உரையைக் கேட்டேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். கிறீன்லாந்து டென்மார்க்கிற்குச் சொந்தமான தீவு. அது விற்பனைக்குரியதல்ல. தாக்குதல் நடந்தால் அதனைப் பாதுகாக்கத் தனது நாடு தயாராக இருக்கிறது.

எங்கள் சொந்த நிலப்பரப்பு உட்பட நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க டென்மார்க் தயாராக உள்ளது. ஒருவரையொருவர் பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிமொழியை நேட்டோ நட்பு நாடுகள் நிறைவேற்றும் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.டெலிகிராப்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *