டென்மார்க், எஸ்டோனியா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுடன் ஆளில்லா விமானங்களுக்கான (ட்ரோன்) ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
துருக்கியில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் பங்குபற்றியுள்ள ஸெலென்ங்ஸ்கி, சமூக ஊடகங்களில் பதிவிட்டு இந்த ஒப்பந்தங்கள் குறித்த செய்தியைப் பகிர்ந்துள்ளார். ஈரான் மீதான போருக்கு பின்னர் வளைகுடா நாடுகள் சிலவற்றுடனும் இத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள ஸெலென்ஸ்கி, ஏற்கனவே ஆறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படிருப்பதாகவும் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டு பெற்றுக் கொண்டுள்ள அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் அதிநவீன ட்ரோன் கைத்தொழில்துறையை உக்ரைன் உருவாக்கியுள்ளது.டென்மார்க்குடனான ஒப்பந்தத்தை அறிவித்த ஸெலென்ஸ்கி, இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு கூட்டு உற்பத்தி, நிபுணத்துவ பரிமாற்றம், ஆயுத ஏற்றுமதியில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்கு அதிக வாய்ப்புகளைத் திறக்கின்றது. உக்ரைனில் கூட்டு உற்பத்தி மேற்கொள்ளும் முதல் நாடு டென்மார்க்’ என்றும் கூறியுள்ளார். அரப் நியூஸ்




