சீன, ரஷ்யக் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி சீனாவின் கிங்டாவோ நகருக்கு அருகிலுள்ள கடல் மற்றும் வான்வெளியில் இன்று ஆரம்பமாவதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சும் ரஷ்ய அரச ஊடகங்களும் நேற்று தெரிவித்தன.
இன்று ஆரம்பமாகும் இப்பயிற்சி எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சிகளைத் தொடர்ந்து, இரு நாடுகளதும் படைகளில் சில, கூட்டுக் கடல் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்காக பசுபிக் பெருங்கடலின் தொடர்புடைய பகுதிகளுக்குச் செல்லும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டன.
பாதுகாப்புச் சவால்களைக் கூட்டாக எதிர்கொள்வதையும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதையும் நோக்காகக் கொண்ட இப்பயிற்சிகள் வருடாவருடம் நடைபெறும் என்றும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, ரஷ்யாவின் பசுபிக் கடற்படையைச் சேர்ந்த போர்க்கப்பல், சிறிய போர்க்கப்பல், டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மீட்புக் கப்பல் ஆகியவை கிங்டாவோவை வந்தடைந்துள்ளதாக ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரொய்ட்டர்ஸ்




