ரூ. 200 பில்லியன் சொத்து மதிப்பை கடந்த CDB நிறுவனம்

1 Min Read

சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் பைனான்ஸ் பிஎல்சி நிறுவனம், 2026 மார்ச் 31 உடன் நிறைவடைந்த நிதியாண்டில் மற்றுமொரு வலுவான நிதி மற்றும் செயற்பாட்டு ரீதியான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. இது ரூ. 200 பில்லியன் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சொத்து மதிப்பை கடந்துள்ளதோடு, ரூ. 4.5 பில்லியன் வரிக்குப் பிந்தைய இலாபத்தை பதிவு செய்து, இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு மத்தியில் தனது நிலையை மேலும் பலப்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 37% இனால் அதிகரித்து, ரூ. 214.7 பில்லியன் ஆக விரிவடைந்துள்ளதுடன், அதன் கடன் வழங்கும் பிரிவனாது, ஈர்க்கக்கூடிய வகையில் 53% இனால் அதிகரித்து, ரூ. 169.2 பில்லியனாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

நிறுவனத்தின் இந்தச் செயற்றிறன் குறித்து அதன் தலைவர் அலஸ்டெய்ர் கொரேரா (Alastair Corera) கருத்துத் தெரிவிக்கையில், “2025/26 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட சாதனைகள் சாதகமான சந்தை நிலவரங்களின் விளைவு மட்டுமல்லாது, திட்டமிட்ட மூலோபாயச் செயலாக்கம், ஒழுங்குடனான நிர்வாகம் மற்றும் எமது திறன்களை வலுப்படுத்துவதற்காக பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் பெறுபேறாகும்.

ரூ. 200 பில்லியன் சொத்து மைல்கல்லைக் கடந்துள்ள நிலையில், CDB தற்போது தனது அடுத்தகட்ட மூலோபாய வளர்ச்சி படியை அடைவதற்கு தன்னை உறுதியாக தயார்படுத்தியுள்ளது.” என்றார்.

2025/26 நிதியாண்டை CDB இன் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளில் ஒன்று என, நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *