மெஸ்ஸி மற்றொரு சாதனை

1 Min Read

ஜோர்தான் அணிக்கு எதிராக கடைசி குழுநிலை போட்டியில் கோல் பெற்றதன் மூலம் ஆர்ஜன்டீனாவின் லியோனல் மெஸ்ஸி மற்றொரு சாதனையை படைத்துள்ளார். டலாஸில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் 60 ஆவது நிமிடத்தில் வைத்து களமிறங்கிய மெஸ்ஸி பிரீ கிக் மூலம் 80 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை புகுத்தினார். இதன்மூலம் அவர் பிஃபா உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் கோல் பெற்ற ஒரே வீரர் என சாதனை படைத்துள்ளார்.

இம்முறை உலகக் கிண்ணத்தில் அவர் பெறும் ஆறாவது கோலாக இது இருந்தது. உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல் பெற்ற வீரராக சாதனை படைத்திருக்கும் மெஸ்ஸி அந்த கோல் எண்ணிக்கையை 19 ஆக அதிகரித்துக் கொண்டார். ஏற்கனவே உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற ஆர்ஜன்டீன அணி ஜோர்தானுக்கு எதிரான போட்டியில் 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *