காலி கோட்டையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு

1 Min Read

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த 12வது சர்வதேச யோகா தின நிகழ்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தளமான காலி கோட்டையில் ஹம்பாந்தோட்டைக்கான இந்திய துணைத் தூதுவர் ஹர்விந்தர் சிங் தலைமையில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

“ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” எனும் கருப்பொருளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தென் மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து வயதுப் பிரிவினரும், பாலின வேறுபாடின்றி திரளாகக் கலந்துகொண்டனர். பங்கேற்பாளர்கள் அனைவரும் நல்வாழ்வு, ஆரோக்கியம், மன அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் யோகாசனப் பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் ஹம்பாந்தோட்டை இந்திய துணைத் தூதுவர் ஹர்விந்தர் சிங் மற்றும் தூதரக அதிகாரிகள், தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசீரிபால மானவடு, தென் மாகாண செயலாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *