நேற்று முன்தினம் ஒன்றாக சிரித்து..இன்று அவரது மறைவுச் செய்தி: பாக்யராஜ் குறித்து நடிகர் சிரஞ்சீவி

1 Min Read

நடிகர், இயக்குநர் பாக்யராஜின் மறைவிற்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் பாக்யராஜ் மறைவு

கோவாவில் நடந்த சுந்தர்.சி, குஷ்பூ மகளின் திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாக்யராஜ் இன்று உயிரிழந்தது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் பாக்யராஜின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

சிரஞ்சீவி இரங்கல்

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு ஆழ்ந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்துள்ளேன். நேற்று முன்தினம், கோவாவில் குஷ்பூ வீட்டு திருமணத்தில் நாங்கள் ஒன்றாக சிரித்து, நகைச்சுவைகளை பகிர்ந்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம்.

பாக்யராஜ் அவர்கள் வாழ்வும், மகிழ்ச்சியும் நிறைந்தவராக இருந்தார். இன்று காலை அவரது மறைவுச் செய்தியைக் கேட்டது நம்ப முடியாததாக இருக்கிறது.

ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர், மிகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர் மற்றும் அருமையான நடிகர், இந்தியத் திரையுலகிற்கு அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். பூர்ணிமா ஜி, சாந்தனு மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கிக்கொள்ள இறைவன் அவர்களுக்கு வலிமையைத் தரட்டும். என் அன்பு நண்பனே, அமைதியாக இளைப்பாறு. உன்னை நாங்க மிகவும் இழப்போம்” என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

 

Chiranjeevi

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *