UPDATE: ஹோமாகம நீர்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்

1 Min Read

UPDATE: ஹோமாகம நீர்வெட்டு அமுலாகும் நேரங்களில் மாற்றம்

முன்னர் அறிவிக்கப்பட்ட நேரத்திற்குப் பதிலாக, திருத்தப்பட்ட புதிய நேரம் நாளை இரவு 8.00 மணி – மறு நாள் (25) இரவு 8.00 மணி வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு
– நாளை மாலை 6.00 மணி – மறு நாள் (25) மாலை 6.00 மணி வரை அமுல்

லபுகம மற்றும் களட்டுவாவ ஆகியவற்றில் இருந்து மஹரகம வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் நாளை (24) மாலை முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முற்றாகத் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

காலகெதர, ஹோமாகம, கொட்டாவ, பன்னிபிட்டிய, பெலன்வத்த, மஹரகம ஆகிய இடங்களில் நாளை (24) மாலை 6.00 மணி முதல்,மறு நாள் (25) மாலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

பிரதான நீர் விநியோகக் குழாயின் பராமரிப்புப் பணிகளைச் மேற்கொள்வதற்கு இந்த நீர் விநியோகத் தடை அவசியமானது எனத் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் சபை, இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

எனவே, பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீரினை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், நீர்வெட்டு அமலில் இருக்கும் காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *