அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

1 Min Read

அநுராதபுரம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான விசேட ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் (20) அநுராதபுரத்திலுள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ஏ. ஆர். எம். தாரிக் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட முக்கிய செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது, கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள், புதிய உறுப்பினர் சேர்க்கைத் திட்டங்கள், மக்கள் நலச் சேவைகளை விரிவுபடுத்தல் மற்றும் மாவட்ட மட்டத்தில் கட்சியின் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. மேலும், பொதுமக்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதன் ஊடாக, கட்சியின் கொள்கைகளையும் செயற்பாடுகளையும் கிராமிய மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *