மியன்மாரில் பாரிய வெடிப்பு, 46 பேர் பலி, 74 பேர் காயம்

1 Min Read

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மியன்மார் நாட்டின் கிராமமொன்றில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 74 பேர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இந்த வெடிப்பு சம்பவ விபத்தில் காங் டாட்டில் சுமார் 200 வீடுகளும், அருகிலுள்ள பான் லோன் கிராமத்தில் மேலும் 100 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள நம்காம் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இவ்வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் விண்ணைத் தொடுமளவுக்கு புகைமூட்டம் வெளிப்பட்டது.

இப்பகுதியைக் கட்டுப்படுத்தி, அரச இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டுவரும் டாங் தேசிய விடுதலை இராணுவம், உள்ளூர் சுரங்கப் பணிகளுக்காக கிடங்கொன்றில் வைத்திருந்த வெடிபொருட்கள் தீப்பற்றிக்கொண்டதால் இவ்வெடிவிபத்து ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த வெடிப்பின் காரணமாக, பல உள்ளூர் கிராமவாசிகள் உயிரிழந்துள்ளதோடு அவர்களது வீடுகளும் சேதமடைந்து காயங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் தேசிய விடுதலை இராணுவம், அந்த மையத்தில் சுரங்கப் பணிகளுக்காக தங்கள் பொருளாதாரத் துறையால் சேமிக்கப்பட்டிருந்த ஜெலிக்னைட் வைக்கப்பட்டிருந்தது. பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *