ரஷ்ய துறைமுகமொன்றில் இருந்து எண்ணெயை ஏற்றிச் சென்ற, தடைசெய்யப்பட்ட கப்பலொன்றை பிரான்ஸ் கைப்பற்றியுள்ளதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
‘டகோர்’ என்ற பெயர் கொண்ட அக்கப்பல் பிரித்தானியா உட்பட பல நட்பு நாடுகளின் ஆதரவுடன், கடல் சட்டத்தை முழுமையாகப் பின்பற்றி, அத்திலாந்திக் சமுத்திரத்தின் சர்வதேசக் கடற்பகுதியில் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இக்கப்பலுக்கு ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேசத் தடைகளையும், கடல் சட்டத்தையும் மீறுவதும், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் போருக்கு நிதியளிப்பதும் கப்பல்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது.



