3.2 கோடி கொசுக்களை வெளியிட உள்ள கூகுள் – ஏன் தெரியுமா?

1 Min Read

கொசுக்களால் டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பெரும்பாலான முயற்சிகள் கொசுக்களின் எண்ணிக்கையை குறைப்பதாக உள்ளது.

ஆனால், கூகுள் நிறுவனம் 3.2 கோடி கொசுக்களை வெளியிட அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

3.2 கோடி கொசுக்களை வெளியிட உள்ள கூகுள்

கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் தனது Debug என்ற திட்டத்தின் கீழ் கூகுள் கொசுக்களை வெளியிட உள்ளது.

3.2 கோடி கொசுக்களை வெளியிட உள்ள கூகுள் - ஏன் தெரியுமா? | Google Set To Release 32 Million Mosquitoes

இந்த திட்டத்தின் கீழ், மலட்டுத்தன்மையுடைய ஆண் கொசுக்களை வளர்த்து அதனை வெளியிடுகிறது. அந்த ஆண் கொசுக்களுடன் பெண் கொசுக்கள் இனசேர்க்கை செய்யும் போது, அவை குஞ்சு பொறிக்காது.

இந்த கொசுக்களை மொத்தமாக வெளியிடாமல் 2 ஆண்டுகளில் படிப்படியாக வெளியிட உள்ளது.

ஆரம்பகட்ட முடிவுகளைக் கவனித்து, அதன் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் உத்திகளைச் சரிசெய்ய உதவும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் நோய் பரவல் விகிதம் அதிகமாக உள்ள கலிபோர்னியா மற்றும் புளோரிடா பகுதிகளில் சில பகுதிகளில் இந்த கொசுக்களை விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முன்மொழிவு தற்போது அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையால் பரிசீலனையில் உள்ளது. சோதனைப் பயன்பாட்டு அனுமதியை வழங்குவதா இல்லையா என்று முடிவெடுப்பதற்கு முன்பு, அந்த முகமை ஜூன் 5 வரை பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *