பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

1 Min Read

T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரமானது, கிரிக்கெட் விளையாட்டின் உற்சாகத்தையும் பிறீமா கொத்துமீயின் துடிப்பான தன்மையையும் ஒன்றிணைத்து, நுகர்வோருக்கு ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்கியிருந்தது. தற்போது அது உத்தியோகபூர்வமாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்த திட்டமானது, இலங்கை முழுவதிலும் உள்ள நுகர்வோருக்கு ‘Hot ‘N’ Spicy Kricket Promotion பொதிகளுக்குள் காணப்படும் தனித்துவமான குறியீட்டை (Code) SMS ஊடாக சமர்ப்பிப்பதன் மூலம் உற்சாகமான பணப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்கியது. இது, ரூ. 1 மில்லியன் மாபெரும் பரிசு, வாராந்தம் ரூ. 50,000 மற்றும் ரூ. 25,000 பணப் பரிசுகள், நாளாந்தம் ரூ. 1,000 பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ரீலோட் (Reload) பரிசுகளை உள்ளடக்கியிருந்தது.

இந்த உற்சாகமான போட்டியில், திருகோணமலையைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலியான பிறீமா கொத்துமீ ரசிகர் ஒருவர் ரூ. 1 மில்லியன் மாபெரும் பரிசைத் தட்டிச் சென்றார். அத்துடன் 6 வார காலப்பகுதியில் மேலும் பலர் நாளாந்தம் மொபைல் ரீலோட்கள் மற்றும் வாராந்த பணப் பரிசுகளை வெற்றி பெற்றுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *