இலங்கையில் அனைவருக்கும் காப்புறுதி கிடைக்க வழிசெய்யும் InsureMe

1 Min Read

2016ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட InsureMe, இந்த அளவில் நாட்டில் முதலாவது மற்றும் ஒரேயொரு ஒட்டுமொத்த காப்புறுதி தொகுப்பாளராக வளர்ச்சி கண்டு, இலங்கையின் காப்புறுதித் துறையில் சிறப்பாக பரிணமிக்கின்றது. கொழும்பில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளதுடன், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (Insurance Regulatory Commission of Sri Lanka – IRCSL) அனுமதியையும் பெற்றுள்ள InsureMe, காப்புறுதியை மிகவும் வெளிப்படையான, அணுகக்கூடிய மற்றும் திறன்மிக்க வழிமுறையில் பெற்றுக்கொள்ளும் தங்குதடையற்ற டிஜிட்டல் அனுபவத்தினூடாக, தனிநபர்களும், வணிக நிறுவனங்களும் காப்புறுதித் திட்டங்களை ஒப்பீடு செய்து, கொள்வனவு செய்து, மற்றும் நிர்வகிப்பதற்கு வலுவூட்டுகின்றது. இலங்கையிலுள்ள உச்ச காப்புறுதி இடைத்தரகர்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றுள்ள InsureMe, காப்புறுதியை அனைவரும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்க வேண்டும் என்ற எளிமையான வாக்குறுதியை அத்திவாரமாகக் கொண்டு தனது வெற்றியைக் கட்டியெழுப்பியுள்ளது. மோட்டார் வாகன, மருத்துவ, ஆயுள், பிரயாண, மற்றும் வியாபாரக் காப்புறுதி உள்ளிட்ட முழுமையான வகைப்பட்ட தனிநபர் மற்றும் நிறுவனத் தீர்வுகளை இத்தளம் வழங்குவதுடன், வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன காப்புறுதித் தொழில்நுட்ப தளங்களின் ஆதரவையும் வழங்குகின்றது. பணிப்பாளரான இந்திக பிரேமதுங்க, நிதி, ஆட்சி நிர்வாகம், மற்றும் காப்புறுதித் துறை தலைமைத்துவத்தில் இரு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

பணிப்பாளரான நிரஞ்சன் மாணிக்கம், காப்புறுதி தீர்வு உருவாக்கம், செயல்பாடுகள், மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஆழமான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், பல்வேறு முன்னணி நிதி மற்றும் காப்புறுதி நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார். InsureMe ன் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான விபுல தர்மபால கருத்து தெரிவிக்கையில்: இலங்கை மக்கள் அனைவரும் அறிவுபூர்வமான நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வலுவூட்டும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றோம்.”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *