சீனாவின் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 82 பேர் உயிரிழப்பு

1 Min Read

சீனாவின் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனா சுரங்க விபத்து

வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் டோங்ஜோ குழுமத்தின் லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கம் உள்ளது.

நேற்று இரவு 7:29 மணிக்கு 247 தொழிலாளர்கள் அங்கு பணியில் இருந்தபோது, சுரங்கத்தில் வெடி விபத்து நிகழ்ந்தது.

சீனாவின் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 82 பேர் உயிரிழப்பு | 82 Dies In China Coal Mine Explosion

சுரங்கத்தில் கார்பன் மோனாக்சைடின் அளவு “வரம்புகளை மீறியது” கண்டறியப்பட்டதை அடுத்து, 4 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் சிக்கியதாகவும் முதலில் தகவல் வெளியானது.

இன்று காலை ஏரளாமானோர் உயிருடன் மீட்கப்பட்டு மேலே கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தற்போது, குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேரைக் மீட்பு குழுவினர் தேடி வருவதாகவும் சீனாவின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் ஜனாதிபதி ஷி ஜின்பிங் அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவின் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 82 பேர் உயிரிழப்பு | 82 Dies In China Coal Mine Explosion

மேலும், “அனைத்து மண்டலங்களும் துறைகளும் இந்த விபத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், பணியிடப் பாதுகாப்பு குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும் பெரிய மற்றும் பேரழிவு விபத்துகள் ஏற்படுவதை உறுதியாகத் தடுத்துக் கட்டுப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *