10 நாட்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வு

1 Min Read

இந்தியாவில், கடந்த 10 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலை மூன்று முறை உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை (மே 23) அன்று பெட்ரோல் லிட்டருக்கு 87 பைசா, டீசல் லிட்டருக்கு 91 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை 99.51 ரூபாயாகவும், டீசல் 92.49 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் இதே அளவு விலை உயர்வு பதிவாகியுள்ளது.

Petrol price hike India 2026, Diesel price increase May 2026, CNG price rise Delhi, India fuel prices latest news, Global crude oil impact India, Strait of Hormuz oil crisis, Petrol diesel rates city-wise #PetrolPrice #DieselPrice #FuelHike #IndiaEconomy #CNGPrice #OilCrisis #BreakingNews #Inflation

இந்தியாவின் 85 சதவீத கச்சா எண்ணெய், இறக்குமதி செய்யப்படுவதால், உலக சந்தை விலை மாற்றங்கள் நேரடியாக உள்ளூர் விலைகளில் தாக்கம் செலுத்துகின்றன.

மேற்காசியாவில் நிலவும் அரசியல் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இந்திய அரசு எவளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது. மக்கள் பீதி அடைந்து அதிகமாக வாங்க வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் தொடர்ச்சியான விலை உயர்வால் போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

மேலும், டெல்லியில் CNG விலையும் கிலோவிற்கு ரூ.1 உயர்ந்து 81.09 ரூபாயாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள், போக்குவரத்து துறைகள் கூடுதல் சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *