SIP முதலீடு தொகையை அதிகரிக்கும் முன் தெரிந்திருக்க வேண்டிய முதன்மையான அம்சங்கள்

1 Min Read

சிஸ்டமாடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்படும் SIP என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான முதலீட்டு முறையாக மாறியுள்ளது.

உங்கள் அவசர நிதி

மாதம் மாதம் சிறு தொகையை பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் நீண்டகால செல்வத்தை உருவாக்கும் இந்த முறை, மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினரிடையே முக்கிய முதலீட்டு பிரிவாக உள்ளது.

SIP முதலீடு தொகையை அதிகரிக்கும் முன் தெரிந்திருக்க வேண்டிய முதன்மையான அம்சங்கள் | Sip Smart Investment Advice

ஆனால் SIP தொகையை அதிகரிக்கும் முன், சில முக்கிய அம்சங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்கள் நிதி நிலைமை சிக்கலாகிவிடும்.

SIP தொகையை அதிகரிப்பதற்கு முன் உங்கள் அவசர நிதி பற்றிய புரிதல் வேண்டும். வாடகை, உணவு, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை தேவையை பூர்த்து செய்ய குறைந்தபட்சம் 9 மாதங்களுக்கான அன்றாட செலவுகளை ஈடுகட்டும் அளவுக்கு உங்கள் சேமிப்பு இருக்க வேண்டும்.

வேலை இழப்பு, உடல்நலக் கோளாறு அல்லது எதிர்பாராத அவசரத் தேவை ஏற்பட்டால், அந்த நிதியைப் பயன்படுத்தவும் SIP தொகையை தொடர்ந்து செலுத்தவும் முடியும்.

மாதாந்திர சம்பளம்

அவசர நிதி இல்லாத நிலையில் SIP தொகையை அதிகரித்தால், அவசரத்தில் அந்த முதலீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்படலாம். அடுத்ததாக, கிரெடிட் கார்டு பாக்கி அல்லது தனிநபர் கடன் போன்ற அதிக வட்டி கொண்ட கடன்கள் இருந்தால், SIP தொகையை அதிகரிக்கக் கூடாது.

முதலில் அந்த அதிக வட்டி கடன்களை அடைத்துவிட்டு, அதன் பிறகு SIP-ஐ அதிகரிப்பது புத்திசாலித்தனமான முடிவாகும். இது உங்கள் நிதி அழுத்தத்தை குறைத்து, முதலீட்டின் உண்மையான பலனை அனுபவிக்க உதவும்.

SIP முதலீடு தொகையை அதிகரிக்கும் முன் தெரிந்திருக்க வேண்டிய முதன்மையான அம்சங்கள் | Sip Smart Investment Advice

மூன்றாவதாக, SIP தொகையை அதிகரிப்பதற்கு முன், உங்கள் மாதாந்திர சம்பளம் அல்லது முதன்மை வருமானம் அதிகரித்திருக்க வேண்டும்.

வருமானம் அதிகரித்தால் மட்டுமே கூடுதல் தொகையை முதலீடு செய்வது நிதி ரீதியாக பாதுகாப்பானது. இது உங்கள் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தி, எதிர்காலத்தில் பெரிய இலக்குகளை எளிதாக அடைய உதவும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *