9 காரட் தங்கத்தில் நகைகள் வாங்கலாமா? அதன் நன்மைகள் மற்றும் குறைகள்

1 Min Read

தங்கம் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு 22 காரட் அல்லது 24 காரட் தான் நினைவுக்கு வரும்.

ஆனால், சமீபத்தில் 9 காரட் தங்கம் நகை உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விலை குறைவாக இருப்பதால், இளம் தலைமுறையினர் அதிகம் விரும்புகின்றனர்.

9 காரட் தங்கம் என்றால் என்ன?

24 காரட் தங்கம் 100 சதவீதம் தூய தங்கம். ஆனால் 9 கரட் தங்கம் 37.5 சதவீதம் தங்கம் மற்றும் 62.5 சதவீதம் பிற உலோகங்கள் (செம்பு, வெள்ளி, சிங்க்) கலந்ததாகும்.

இதனால் இது வலிமையானதாக இருக்கும். இந்த 9 காரட் தங்க நகைகளில் நகைகளில் ‘375’ என்ற முத்திரை காணப்படும்.

9K gold jewellery pros and cons, Is 9 karat gold real, 9K vs 22K gold jewellery, Budget gold jewellery options, 9K gold durability and resale value #9KGold #GoldJewellery #BudgetJewellery #FashionTrends #GoldBuyingTips #JewelleryGuide

இதன் நன்மைகள்:

  • 24 காரட் தங்கம் மென்மையானது, எளிதில் கீறல், சேதம் ஏற்படும்.
  • 9 காரட் தங்கம் வலிமையானதால், தினசரி பயன்படுத்தும் நகைகளுக்கு ஏற்றது.
  • இளம் தலைமுறையினர், திருமணம் போன்ற பெரிய நிகழ்வுகளை காத்திருக்காமல், உடனடியாக அணியக்கூடிய நவீன வடிவமைப்புகளை விரும்புகின்றனர்.
  • விலை குறைவாக இருப்பதால், அதிக செலவில்லாமல் அழகான நகைகளை வாங்க முடிகிறது.

9K gold jewellery pros and cons, Is 9 karat gold real, 9K vs 22K gold jewellery, Budget gold jewellery options, 9K gold durability and resale value #9KGold #GoldJewellery #BudgetJewellery #FashionTrends #GoldBuyingTips #JewelleryGuide

இதன் குறைகள்:

  • முதலீடாக 9 காரட் தங்கம் ஏற்றதல்ல. மறுவிற்பனை மதிப்பு மிகக் குறைவு.
  • செம்பு, வெள்ளி கலந்ததால் ஈரப்பதம், வியர்வை, வாசனை திரவியங்களால் எளிதில் மங்கும்.
  • அதிக பராமரிப்பு தேவை.
  • சிலருக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
  • நிறம் சற்று மங்கலான மஞ்சளாக காணப்படும். பாரம்பரிய தங்கத்தின் பளபளப்பை விரும்புவோருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.

பாரம்பரிய திருமண நகைகள் அல்லது முதலீடு நோக்கத்திற்காக 22 காரட் அல்லது 24 காரட் தங்கம் சிறந்தது.

ஆனால், தினசரி அணியக்கூடிய, விலை குறைவான, நவீன வடிவமைப்புகளுக்காக 9 காரட் தங்கம் ஒரு நல்ல தெரிவு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *