எண்ணெய் கப்பலைக் கடத்திய சோமாலியா கடற்கொள்ளைகர்கள்… இந்தியர் உள்பட 17 பேரின் கதி?

1 Min Read

இந்திய பெருங்கடல் பகுதியில் பாகிஸ்தானின் கச்சா எண்ணெய் கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ள நிலையில் இந்தியர் உள்பட 17 பேர் நிலை குறித்து அச்சம் எழுந்துள்ளது.

கடற்கொள்ளையர்களிடம்

சோமாலியாவில் உள்ள பெர்பெரா துறைமுகத்தில் இருந்து சோமாலியா தலைநகர் மெகாடிஷூ நோக்கி பாகிஸ்தானை சேர்ந்த கச்சா எண்ணெய் கப்பல் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில், சோமாலியா நாட்டின் கடற்கரை நகரமாக ஹஃப்யூன் (Hafun) மற்றும் பண்டர் பெய்லா (Bandarbeyla) ஆகிய நகரங்களுக்கு இடையே கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களிடம் சிக்கியது.

கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்ட ஹானர் 25 என்ற இந்த எண்ணெய் கப்பல் பிப்ரவரி 20ம் திகதி சோமாலிலாந்தின் (சோமாலியாவில் இருந்து பிரிந்து தனி பிரதேசமாக செயல்படுகிறது) பெர்பெராவிலிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றது.

அங்கிருந்து ஏப்ரல் மாத தொடக்கத்தில் மீண்டும் பயணத்தை தொடங்கியது. ஹார்முஸ் நீரிணையைக் கடந்து சோமாலியாவை சென்றடைந்தது.

ஒருவர் இந்தியா மற்றொருவர் இலங்கை

தொடர்புடையக் கப்பலில் 18,500 பீப்பாய் கச்சா எண்ணெய் உள்ளது. மொத்தம் 11 பேர்கள் கொண்ட இரண்டு குழுக்கள் கப்பலைக் கடத்தியுள்ளனர்.

கடற்கரையில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. அதில் இருந்த 17 ஊழியர்களில் 10 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.

4 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர். ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர். மற்றொருவர் இலங்கையை சேர்ந்தவர். இன்னொருவர் மியான்மரை சேர்ந்தவர் . இவர்களின் நிலை என்னவென்று தகவல் இல்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *