நியூசி. மகளிர் ‘ஏ’ அணி மேயில் இலங்கை வருகை

1 Min Read

இலங்கை மகளிர் ஏ அணிக்கு எதிராக இரு தரப்பு தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்து மகளிர் ஏ அணி எதிர்வரும் மே மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி எதிர்வரும் மே 7 ஆம் திகதி இலங்கை வரவுள்ள நியூசிலாந்து ஏ அணி இலங்கையுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து ஏ அணிகள் ஒருநாள் தொடரில் ஆடவிருப்பதோடு இதன் முதல் போட்டி மே 12 ஆம் திகதி நடைபெறும். அடுத்த இரு போட்டிகளும் மே 15 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இதனையடுத்து டி20 தொடர் மே 21 ஆம் திகதி ஆரம்பமாகும். இதன் கடைசி இரு போட்டிகளும் மே 23 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *