முஸ்லிம் மத்தி. மாகாண மட்டத்திற்கு முன்னேற்றம்

1 Min Read

அக்கரைப்பற்று கல்வி வலய மட்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய 16, 20 வயதுப் பிரிவினர்கள் வெற்றி பெற்று கிழக்கு மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். ஜெமீல் தலைமையில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் (21) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 20 வயதுப் பிரிவில் பொத்துவில் அல்-இஷ்ராக் மகா வித்தியாலய அணியினரையும், 16 வயதுப் பிரிவில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அணியினரையும் அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி பெற்று கிழக்கு மாகாண மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *