லங்கா பிரீமியர் லீக் ஜூலை 10இல் ஆரம்பம்

1 Min Read

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 10 தொடக்கம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆறாவது முறையாக நடைபெறும் இந்தத் தொடர் கொழும்பு, எஸ்.எஸ்.சி., ஆர். பிரேமதாச, பல்லேகல மற்றும் தம்புள்ளை என நான்கு மைதானங்களில் இடம்பெறவுள்ளன. ஒன்லைன் மூலமான வெளிநாட்டு வீரர்களின் பதிவு எதிர்வரும் மே 4 ஆம் திகதி திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஜி குழுமத்தின் கூட்டாண்மையில் எல்.பி.எல். உரிமையைக் கொண்ட இந்தத் தொடர் இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்படுகிறது. சர்வதேச வீரர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதன்மையான தொடராக அமையும் லங்கா பிரிமியர் லீக் 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *