ஆப்பிள் நிறுவனம் தனது ஹார்ட்வேர் பொறியியல் தலைவரான ஜான் டெர்னஸை (John Ternus), புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமித்துள்ளது.
டெர்னஸ், 2001 முதல் ஆப்பிளில் பணியாற்றி வருகிறார். அவர் iPhone, Mac, iPad, Apple Watch, AirPods போன்ற முக்கிய தயாரிப்புகளின் ஹார்ட்வேர் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
தற்போது பொறுப்பில் இருக்கும் டிம் குக் (Tim Cook) பதவி விலகிய பின், செப்டம்பர் 1 முதல் அவர் CEO பொறுப்பை ஏற்கிறார்.
15 ஆண்டுகளாக தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த டிம் குக்,, அப்பிள் இயக்குநர் குழுவின் செயல் தலைவராக (Executive Chairman) தொடர உள்ளார்.
ஜான் டெர்னஸ்

தயாரிப்பு வடிவமைப்பு, நிலைத்தன்மை, மற்றும் ஆடியோ தொழில்நுட்பங்களில் புதுமைகளை கொண்டு வந்தவர் டெர்னஸ்.
அவரது தலைமையில், ஆப்பிள் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம், 3D-பிரிண்ட் செய்யப்பட்ட டைட்டானியம், மற்றும் நீண்ட ஆயுட்காலம் கொண்ட சாதனங்களை அறிமுகப்படுத்தியது.
AirPods-இல் மேம்பட்ட ஒலி ரத்து (Noise Cancellation) மற்றும் கேட்கும் உதவி அம்சங்களையும் அவர் முன்னெடுத்தார்.
50 வயதான டெர்னஸ், டிம் குக்கை விட 15 ஆண்டுகள் இளையவர். இதனால், ஆப்பிள் நீண்டகாலத்திற்கான CEO-வை தெரிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.
அவர் தயாரிப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவார், அதேசமயம் செயல்பாட்டு விடயங்களை COO சபீக் கான் போன்ற மூத்த நிர்வாகிகள் கவனிப்பார்கள்.
ஆப்பிள் நிறுவனம், AI போட்டியில் முன்னிலை பெறும் நோக்கத்துடன் டெர்னஸை தெரிவு செய்துள்ளது. அவரது தீர்மானங்களை விரைவாக எடுக்கும் திறன், ஆப்பிளின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.



