உலகளாவிய எரிசக்தி சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் எரிசக்தியைப் பதுக்குவதையும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதையும் தவிர்க்குமாறு மூன்று முக்கிய சர்வதேச நிறுவனங்கள் நாடுகளை வலியுறுத்தியுள்ளன.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் சர்வதேச எரிசக்தி முகவரகம் ஆகிய மூன்று நிறுவனங்களுமே இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட், சர்வதேச எரிசக்தி முகவரகத்தில் அங்கம் வகிக்கும் 32 நாடுகளும் கொண்டிருக்கும் எரிபொருள் இருப்புக்கு சமமான கையிருப்பை சீனா கொண்டிருந்தும் கூட தொடர்ந்தும் அதனை கொள்வனவு செய்துகொண்டும், பதுக்கிக்கொண்டும் இருப்பதோடு, சில பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் பேச்சாளர் லியு பெங்யு, உலகப் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் மத்திய கிழக்கின் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுவது அவசரமான பணி. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர சீனா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஆக்கப்பூர்வமான பங்கைத் தொடர்ந்து ஆற்றிவரும்.
உலகளாவிய எரிசக்தி சந்தை எதிர்கொள்ளும் பற்றாக்குறைகளுக்கு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.




