காட்டுப்பன்றிகளை துரத்திய ஹியூமனாய்டு ரோபோ: விரக்தியில் ஆற்றிய எதிர்வினை

1 Min Read

வார்சா நகரில் காட்டுப்பன்றிகளை ஹியூமனாய்டு ரோபோ ஒன்று துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பன்றிகளை துரத்தும் ரோபோ

வார்சா நகரில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் காட்டுப்பன்றிகளை எட்வர்ட் வார்சாக்கி(Edward Warchocki) என பெயரிடப்பட்ட ஹியூமனாய்டு ரோபோ ஒன்று துரத்திய சம்பவம் அந்நகர மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Unitree G1 ரகத்தை சேர்ந்த மாற்றியமைக்கப்பட்ட எட்வர்ட் ஹியூமனாய்டு ரோபோ, புல்வெளியில் ஓடிய காட்டுப்பன்றிகளை துரத்தி கொண்டு ஓடுவதும், இறுதியில் பன்றிகளை பிடிக்க முடியாமல் போனதால் விரக்தியில் வானத்தை பார்த்து கையால் குத்துவது போன்ற சைகைகள் செய்தது சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் பதிவாகியுள்ளது.

இணையத்தில் பலரும் ரோபோவின் செயல்களை வேடிக்கையானது என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Unitree G1 ரோபோ

காட்டுப்பன்றிகளை துரத்திய ஹியூமனாய்டு ரோபோ: விரக்தியில் ஆற்றிய எதிர்வினை: வீடியோ | Humanoid Robot Chase Wild Boars In Warsaw

வீடியோவில் இடம் பெற்றுள்ள Unitree G1 ரக ரோபோ Unitree Robotics நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும்.

இந்த ரோபோ இந்திய சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட 13.5 லட்சம் ரூபாய் ஆகும்.

சுமார் 25 கிலோ எடையுள்ள இந்த ரோபோவில், மல்டி மாடல் AI குரல் மற்றும் உருவ அங்கீகாரம் ஆகியவை உள்ளது, மேலும் குத்துச்சண்டை, கார்ட்வீல், மற்றும் கீப் அப் போன்ற சிறப்பு திறன்களை இந்த ரோபோ கொண்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *