அணுசக்தித் தளங்களில் பிரித்தானிய வீரர்களின் செயலால் அதிர்ச்சி

1 Min Read

பிரித்தானியாவின் மிகவும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தித் தளத்தில், வீரர்கள் தங்கள் இருப்பிடங்களை வெளிப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தளம்

பிரித்தானிய தளங்களைச் சுற்றி ட்ரோன்கள், பதிலிகள் மற்றும் உளவாளிகள் செயல்படுவதாக மீண்டும் மீண்டும் தென்பட்டது கவலையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பிரித்தானிய வீரர்களின் செயல் மற்றொரு கவலையை எழுப்பியுள்ளது.

concerns rises uk soldiers using strava app

அதாவது, பிரித்தானியாவின் மிகவும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தித் தளங்களில் ஒன்றில், ஆயுதப்படைகளின் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஸ்ட்ராவா (Strava) என்ற செயலியைப் பயன்படுத்தியுள்ளனர்.

உடற்பயிற்சி செயலியான ஸ்ட்ராவாவில் வீரர்கள், தாங்கள் ஓடும் நேரங்களை பகிரங்கமாக கண்காணித்து, பல இராணுவத் தளங்களை புவியியல் ரீதியாக துல்லியமாக குறிப்பிட்டுள்ளனர்.

concerns rises uk soldiers using strava app

எழுந்துள்ள கவலை

தி ஐ பேப்பர் ஊடகம் நார்த்வுட்டில் உள்ள இராணுவ முக்கிய மையத்தில் பணியாளர்கள் இருந்ததை கண்காணித்துள்ளது.

விரோத சக்திகள் இந்த முக்கியதுவம் வாய்ந்த தளங்களைப் பற்றிய உளவுத் தகவல்களை சேகரித்து, பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அவற்றை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடும் என்ற கவலைகளை இது எழுப்பியுள்ளது.

concerns rises uk soldiers using strava app

முன்னதாக, சைப்ரஸில் உள்ள RAF அக்ரோதிரி மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தளங்களில் பணியில் உள்ள வீரர்களையும் இந்த செயலி மூலம் அடையாளம் காண முடிந்தது குறிப்பிடத்தக்கது.

concerns rises uk soldiers using strava app

concerns rises uk soldiers using strava app

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *